மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ராமநாயக்கன்பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சேலம்
ஆத்தூர்:-
ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் காமராஜர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த மாதம் 24-ந் தேதி கணபதி ஹோமத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழா அன்று காலையில் கோ பூஜை, புண்ணிய யாக பூஜை, அஷ்டலட்சுமி ஹோமம் போன்றவை செய்யப்பட்டு, குடம் புறப்பாடு நடந்தது. பின்னர் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
Related Tags :
Next Story