அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மகாருத்ரா அபிஷேகம்
உலக நன்மை வேண்டி அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மகாருத்ரா அபிஷேகம் தருமபுர ஆதீனம் பங்கேற்றார்
மயிலாடுதுறை
திருக்கடையூர்:
திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். மேலும் இங்கு மட்டுமே ஆயுள் ஹோமங்கள் நடைபெறுகின்றன. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் நேற்று உலக நன்மை வேண்டி மகா ருத்ரா அபிஷேகம் நடந்தது. இதில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியர்கள் சர்வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ருத்ரா ஜபம் பாராயணம் செய்து ருத்ரா ஹோமம் மற்றும் கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. அமிர்தகடேஸ்வரர், அபிராமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story