மகாசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா


மகாசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x

மகாசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

திருவாரூர்

நன்னிலம் அருகே உள்ள வண்டாம்பாளை மகாசக்தி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் தினமும் பல்வேறு அலங்காரம் மற்றும் வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. நேற்று திரளான பக்தர்கள் பால் காவடி மற்றும் அலகு காவடி எடுத்து ஊர்வலமாக கோவிைல வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால்அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.


Next Story