மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில்தேசிய செல்போன் கண்காணிப்பு செயலி மூலம் 2 நேரம் வருகைப்பதிவு: கலெக்டர்


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில்தேசிய செல்போன் கண்காணிப்பு செயலி மூலம் 2 நேரம் வருகைப்பதிவு: கலெக்டர்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தேசிய செல்போன் கண்காணிப்பு செயலி மூலம் 2 நேரம் வருகைப்பதிவு அமல்படுத்துவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தேசிய செல்போன் கண்காணிப்பு செயலி மூலம் 2 நேரம் வருகைப்பதிவு செய்யப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் ெதரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசியசெல்போன் செயலி

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்திடும் வகையில் புகைப்படத்துடன் கூடிய புவிசார் புகைப்படங்கள், தேசிய செல்போன் கண்காணிப்பு செயலி மூலம் வருகைப்பதிவு விவரம் ஏற்கனவே, பணிதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தனிநபர் பணிகள் தவிர அனைத்து பணிகளுக்கும் தேசிய கைபேசி கண்காணிப்பு செயலி மூலம் மட்டுமே வருகைப் பதிவு செய்து அதனடிப்படையில் மட்டுமே ஊதியம் பணியாளர்களுக்கு வழங்கிட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

பயனாளிகள்

ஒத்துழைக்க வேண்டும்

ஆகையால் பணித்தளங்களில் தேசிய செல்போன் கண்காணிப்பு செயலி மூலம் இரண்டு நேரங்களிலும் (முற்பகல் மற்றும் பிற்பகல்) வருகைப் பதிவை 100 சதவீதம் பதிவு செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டபணியாளர்கள், பயனாளிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story