மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர்கள் கூட்டம்
திருமக்கோட்டை அருகே மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர்கள் கூட்டம்
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை அருகே உள்ள ராதாநரசிம்மபுரம் மழை மாரியம்மன் கோவிலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை தலைவர் பாண்டியன் தலைமை ஏற்றார். கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தலைவராக பாண்டியன், கவுரவ தலைவராக சாந்தகுமார், துணைத்தலைவராக கலைச்செல்வி, செயலாளராக கண்ணன், துணை செயலாளராக பிரேமா, பொருளாளர்களாக வளர்மதி, பிரேம் ஆனந்த், ஒருங்கிணைப்பாளராக சுகுணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பணியாளர்கள் வேலை செய்து ஊதியம் கிடைக்காதவர்கள் பட்டியல் கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு கொடுப்பது, தற்போது பணியாளர்கள் வேலையில் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் ரூ.251 வழங்கிட வேண்டும். அரசு அறிவித்தபடி நபர் ஒன்றுக்கு ஆண்களுக்கு 100 நாளும், பெண்களுக்கு 150 நாட்களும் வேலை வழங்கிட வேண்டும். பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.