மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் காவேரி அம்மாள், மாவட்ட செயலாளர் விஜயா, நிர்வாகி பூங்கொடி, ஐ.என்.டி.யூ.சி. தலைவர் சென்னகேசவன், பொதுச் செயலாளர் தங்கவேல், செயலாளர் சாமுவேல், துணைத்தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story