நடிகர் ரஜினிகாந்த் மகள் வீட்டில் திருடிய வேலைக்காரப்பெண், கார் டிரைவர் ஜாமீனில் விடுதலை


நடிகர் ரஜினிகாந்த் மகள் வீட்டில் திருடிய வேலைக்காரப்பெண், கார் டிரைவர் ஜாமீனில் விடுதலை
x

நடிகர் ரஜினிகாந்த் மகள் வீட்டில் திருடிய வேலைக்காரப்பெண், கார் டிரைவர் ஜாமீனில் விடுதலை.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் லாக்கரில் இருந்த நகைகள் திருட்டுப்போன வழக்கில் தேனாம்பேட்டை போலீசார் வேலைக்காரப்பெண் ஈஸ்வரி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 153 பவுன் நகைகள், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் மீட்கப்பட்டன.

திருடிய நகைகளை விற்றதில் நிலம் வாங்கி வீடு கட்டிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. கைதான ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகியோர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story