மயில்பாறை முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா


மயில்பாறை முருகன் கோவிலில்   ஆடிக்கிருத்திகை விழா
x

மயில்பாறை முருகன்கோவிலில் நடந்த ஆடிக்கிருத்திகை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

மயில்பாறை முருகன்கோவிலில் நடந்த ஆடிக்கிருத்திகை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் அருகில் மலையம்மன் கோவில் சாலையில் மலையடிவாரத்தில் உள்ள மயில்பாறை வேல்முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா நடந்தது. நேற்று அதிகாலை 4 மணியளவில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.

விழாவுக்கு வக்கணம்பட்டி ஊர் கவுண்டர் கண்ணதாசன், ஏலகிரி கிராம ஊர் கவுண்டர் சசிகுமார், ஊர் நாட்டாமை சென்றாயன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ேநற்று மாலை 4 மணியளவில் மலையம்மன் கோவில் இருந்து மயில்பாறை முருகன் கோவில் வரை தேர் ஊர்வலமாக சென்றது. நாதஸ்வர கச்சேரி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஏலகிரி கிராம ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

-------

Image1 File Name : 11818931.jpg

----

Reporter : KALAISELVI MURALI Location : Vellore - JOLARPET


Next Story