பேராவூரணி ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணிநாளை மூடப்படும் என அறிவிப்பு
பராமரிப்பு பணி நடப்பதால் பேராவூரணி ரெயில்வே கேட் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி நடப்பதால் பேராவூரணி ரெயில்வே கேட் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே கேட்
பேராவூரணியில் சேதுபாவாசத்திரம் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் ரெயில்வே கேட் மூடப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது.
நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பேராவூரணி- சேதுபாவாசத்திரம் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் என ரெயில்வே துறை சார்பில் அங்கு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
மொய் விருந்து
ஞாயிற்றுக்கிழமை அன்று பேராவூரணியில் வாரச்சந்தை நடைபெறும். மேலும் தற்போது மொய் விருந்து காலமாக இருப்பதால் அதிகமான போக்குவரத்து சேதுபாவாசத்திரம் சாலையில் இருக்கும். ஏனெனில் இந்த சாலையில் 10-க்கும் மேற்பட்ட மொய் விருந்து அரங்கங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் அதிகளவில் இப்பகுதியில் போக்குவரத்து இருக்கும். இந்த நிலையில் ரெயில்வே துறையினர் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தி உள்ளனர். இந்த பாதைக்கு பதிலாக மாற்றுப்பாதையில் செல்ல 3 கிலோ மீட்டர் தூரம் சென்று நகரப் பகுதிக்குள் வர வேண்டும்.
எனவே ரெயில்வே கேட் பராமரிப்பு பணியை இரவு நேரத்தில் அல்லது வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.