பராமரிப்பு பணி: நெல்லை-பாலருவி ரெயில் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக நெல்லை-பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
கேரள மாநிலம் சாலக்குடி அருகே ரெயில்வே பாலம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக நேற்று இரவு நெல்லை சந்திப்பில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை -பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் (16791) ரத்து செய்யப்பட்டது.
இதே போல் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாலக்காட்டில் இருந்து புறப்பட வேண்டிய (16792) பாலக்காடு -நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்து உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire