பராமரிப்பு பணி:அனுப்பானடி, மாகாளிப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


பராமரிப்பு பணி:அனுப்பானடி, மாகாளிப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

பராமரிப்பு பணி காரணமாக மாகாளிப்பட்டி, அனுப்பானடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மதுரை


பராமரிப்பு பணி காரணமாக மாகாளிப்பட்டி, அனுப்பானடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணி

மதுரை மாகாளிப்பட்டி, அனுப்பானடி, தெப்பம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இதன்படி மாகாளிப்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மகால் 1 முதல் 7 தெருக்கள், பால்மால் குறுக்குத்தெரு, ராணிபொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடபிள்ளை சந்து, காளி அம்மன் கோவில் தெரு, மேலத்தோப்பு பகுதிகள், புது மாகாளிபட்டி ரோடு மார்க்கெட் அருகில், புது மாகாளிபட்டி ரோடு வடக்குப்பகுதி, கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோவில் பகுதி, பிள்ளையார் பாளையம் கிழக்குப்பகுதி மற்றும் மேற்குப்பகுதி, செட்டியூரணி, எப்.எப். ரோடு, பாம்பன் ரோடு, சண்முகமணி நாடார் சந்து, மஞ்சணகார தெரு, மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்தூண் பகுதிகள், நவபாத்கானா தெரு, பத்து தூண் பகுதிகள், பந்தடி தெருக்கள், ராணி பொன்னம்மாள் ரோடு, புது நல்ல முத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி. காலனி, ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், கே.ஆர்.மில் ரோடு, கீழவாசல், கீரைத்துறை பகுதிகள், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, வீமபிள்ளை வடக்குச்சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர். ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ. பல் மருத்துவக்கல்லூரி பகுதிகள் மற்றும் நாகுபிள்ளை தோப்பு ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.

அனுப்பானடி

அனுப்பானடி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் கண் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர் சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி. காலனி, முந்திரிதோப்பு மற்றும் சேவகப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் நாளை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

மேலும் தெப்பம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட தெப்பக்குளம் தெற்கு, புது ராமநாதபுரம் ரோடு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, காமராஜர் சாலை, அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினபுரம், இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம், கிருஷ்ணாபுரம், மேல அனுப்பானடி கிழக்கு பகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர். புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி.ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவன்யூ மற்றும் திருமகள் நகர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை மின்செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story