பராமரிப்பு பணிகள்: திருப்பாலை, பாண்டிகோவில் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


பராமரிப்பு பணிகள்:  திருப்பாலை, பாண்டிகோவில் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

திருப்பாலை, பாண்டிகோவில் பகுதிகளில் பராமரிப்பு பணியின் காரணமாக மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை


திருப்பாலை, பாண்டிகோவில் பகுதிகளில் பராமரிப்பு பணியின் காரணமாக மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருப்பாலை

திருப்பாலை மற்றும் மகாத்மா காந்திநகர் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதன்படி திருப்பாலை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யா நகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க் டவுன், பி மற்றும் டி காலனி, பாமா நகர், பொறியாளர் நகர், சொட்டிகுளம், சண்முகா நகர், விஜய்நகர், கலைநகரின் ஒரு சில பகுதிகள், மீனாட்சி நகர், இ.பி. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இலந்தைகுளம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, எல்கார்ட், கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலை மலைநகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனி காடர்ன், ஸ்ரீராம்நகர், பி,கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம்.நகர் பின்புறம், வி.என்.சிட்டி, கிளாசிக் அவென்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

உயரழுத்த மின்பாதை

மகாத்மா காந்திநகர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபுரம், மகாத்மா காந்திநகர், முல்லைநகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

அண்ணாநகர் உயரழுத்த மின்பாதையில் அன்னை நகர் மெயின்ரோடு, சுகுணா ஸ்டோர் பகுதிகள், வைகை காலனி பி.பி.எம். பள்ளிக்கூட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்தார்.

இதேபோல பசுமலை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதன்படி திருவள்ளுவர் நகர் 1 முதல் 11 தெரு வரை, முருகன் டாக்கிஸ் தெரு, யோகியார் நகர் முழுவதும் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார்.


Next Story