பராமரிப்பு பணி: அனுப்பானடி, எல்லீஸ்நகர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


பராமரிப்பு பணி: அனுப்பானடி, எல்லீஸ்நகர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

பராமரிப்பு பணி காரணமாக அனுப்பானடி, எல்லீஸ்நகர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மதுரை


பராமரிப்பு பணி காரணமாக அனுப்பானடி, எல்லீஸ்நகர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணி

மதுரை அனுப்பானடி, தெப்பம், எல்லீஸ் நகர் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அந்த பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, அனுப்பானடி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் கண் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால்பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜாநகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி. காலனி, முந்திரிதோப்பு மற்றும் சேவகப் பெருமாள் கோவில் பகுதிகள் ஆகிய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும்.

தெப்பக்குளம்

தெப்பம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏபிடி சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர.் ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினம், பிஸ்சர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் ஒன்று முதல் ஆறுவரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிக்காரத்தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், மேல அனுப்பானடி கிழக்குபகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி.ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவன்யூ மற்றும் திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்படும்.

எல்லீஸ் நகர்

எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி. அபார்ட்மெண்ட், டி.என்.சி.பி. அபார்ட்மெண்ட், போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, கென்னட் ஹாஸ்பிடல் ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், போடி லைன், சித்தாலாட்சி நகர், எஸ்.டி.சி. ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியரம் போலீஸ் நிலையம், வசந்த் நகர், ஆண்டாள் புரம், அக்ரினி அபார்ட்மெண்ட்ஸ், வசுதரா அபார்ட் மெண்ட்ஸ், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ். ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு, காக்கா தோப்பு, மேலமாசி வீதி, பிள்ளையார் கோவில் வரை, சத்தியமூர்த்தி நகர், பி.ஆர்.சி. தலைமை அலுவலகம், பி.ஆர்.சி.எதிர்புறம், நேரு நகர் கிழக்குப்பகுதி, பொற்குடம் மற்றும் எஸ்.பி.ஓ.ஏ. 2-வது காலனி ஆகிய பகுதிகளில் இன்று மின்சார வினியோகம் தடைபடும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story