ஏ.ஐ.டி.யு.சி.யினர் சாலை மறியல்


ஏ.ஐ.டி.யு.சி.யினர் சாலை மறியல்
x
திருப்பூர்

ஏ.ஐ.டி.யு.சி.யினர் சாலை மறியல்

உடுமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பஸ் நிலையம் அருகில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்திரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இஷாக், சுப்பிரமணியம், ரணதேவ், ஒன்றியக்குழு உறுப்பினர் குருவம்மாள் சவுந்திரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். வேலை நாட்களை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து ரவுண்டானா அருகில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 159 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story