சூறைக்காற்றுடன் மழை: மக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன விவசாயிகள் கவலை


சூறைக்காற்றுடன் மழை:    மக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன    விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கடுவனூர், வடபொன்பரப்பி, கானங்காடு, மைக்கேல்புரம், சவேரியார்பாளையம், மேல் சிறுவள்ளூர், சேராப்பட்டு மற்றும் கல்வராயன்மலை அடிவார பகுதிகளான ஆனைமடுவு, மூலக்காடு, லக்கிநாயக்கன்பட்டி, புதுப்பட்டு, புளியங்கோட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கரில் கரும்பு, மக்காச்சோளம், நெல் போன்ற பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் லக்கிநாயக்கன்பட்டி, மூலக்காடு, ஆனைமடுவு ஆகிய கிராமங்களில் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன. இதனால் 3 கிராம விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் சூறைக்காற்றால் வேரோடு சாய்ந்து கிடக்கிறது. இதனால் நாங்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே வேளாண் அதிகாரிகள் சாய்ந்து கிடக்கும் மக்காச்சோள பயிர்களை பார்வையிட்டு, அதனை காப்பாற்ற எங்களுக்கு உரிய ஆலோசனை வழங்கவேண்டும் என்றனர்.


Next Story