மக்காச்சோள விளைச்சல் அமோகம்


மக்காச்சோள விளைச்சல் அமோகம்
x

இடையக்கோட்டை பகுதியில் மக்காச்சோளம் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, கள்ளிமந்தையம், பொருளுர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது மக்காச்சோளம் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

வெயிலில் உலர வைத்து, எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை விவசாயிகள் பிரித்து எடுக்கின்றனர். அதனை ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து வருகிற வியாபாரிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 100 கிலோ ரூ.2 ஆயிரத்து 200-க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.2 ஆயிரத்து 350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் இன்னும் சில நாட்களில் வரத்து அதிகமானால், விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.


Next Story