கலர் சாட்டர் செய்து தரமான அரிசி வழங்க வேண்டும்


கலர் சாட்டர் செய்து தரமான அரிசி வழங்க வேண்டும்
x

கலர் சாட்டர் செய்து தரமான அரிசி வழங்க வேண்டும் என அரவை முகவர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரவை முகவர்களுடன் அரிசியை கலர் சாட்டர் செய்யப்பட்டு தரமான அரிசியாக வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு 9,400 டன் அரவை திறன் கொண்ட புழுங்கல் அரிசி அரவை செய்யும் 8 அரவை முகவர்களும், 8,500 டன் அரிசி அரவை செய்யும் 6 அரவை முகவர்களும் உள்ளனர்.

அனைத்து அரவை முகவர்களுக்கும் மாதாந்திர அரவை திறனுக்கு ஏற்ப நெல்லை இயக்கம் செய்து, கலர் சாட்டர் செய்யப்பட்ட தரமான அரிசியாக அரைத்து வழங்க அரிசி அரைைவ முகவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவர் அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ராஜா, வேளாண்மை துணை இயக்குனர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story