மரத்தடியில் அமர்ந்து பட்டாசு உற்பத்தி


மரத்தடியில் அமர்ந்து பட்டாசு உற்பத்தி
x

மரத்தடியில் அமர்ந்து பட்டாசு உற்பத்தி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு்ள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைக்கு அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி குருபாக்கியம் மற்றும் வருவாய்த்துறைனர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பட்டாசு தயாரிக்கும் இடத்திற்கு வெளியே மரத்தடியில் அமர்ந்து 50 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் குருபாக்கியம் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பட்டாசு ஆலை நிர்வாகிகள் ராமலட்சுமி, ஹேமமாலினி, மாடசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story