உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் மகோற்சவம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் மகோற்சவம்
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
வரலாற்றில் புகழ் பெற்றதும் ஆன்மிகத்தில் பிரசித்தி பெற்றதுமான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் ஐப்பசி மாத திருமூல மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு கோவில் மடாதிபதி ஜீயர் முன்னிலையில் மணவாள மாமுனிகளுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில் திருக்கோவிலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் ஏஜெண்டு கோலாகலன் தலைமையில் விழா குழுவினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story