விருத்தாசலத்தில் மலேரியா நோய் தடுப்பு பணி
விருத்தாசலத்தில் மலேரியா நோய் தடுப்பு பணி நடைபெற்றது.
விருத்தாசலம்
விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டை பகுதியை சோ்ந்த 74 வயதுடைய முதியவர் ஒருவர் கடந்த மாதம் மலேரியா நோய் அறிகுறிகளுடன் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து அப்பகுதியில் மலேரியா நோய் தடுப்பு பணியில் விருத்தாசலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலச்சந்திரன், இளநிலை பூச்சியியல் வல்லுநர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ராஜா மற்றும் நகராட்சி கள பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசுப்புழுக்களை சேகரித்து ஆய்வு செய்தனர். மேலும் வீடுகளில் தேங்கி இருக்கும் கழிவு நீர் மற்றும் நன்னீரில் கொசுப் புழுக்களை அழிக்கும் மருந்துகளை ஊற்றி அவற்றை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் வீடுகள் மற்றும் வீதிகளில் ஐ.ஆர்.எஸ். என்ற முதிர் கொசுவை அழிக்கும் மருந்தினை நவீன எந்திரம் மூலம் அடிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.