வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி


வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி
x

வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.90 லட்சம் மோசடி

திருப்பூர்

குன்னத்தூர்

குன்னத்தூர் அருகே வீட்டுமனை வாங்கித்தருவதாக 47 பேரிடம் ரூ.90 லட்சம் ேமாசடி செய்த ரியல் எஸ்டேட் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீட்டுமனை

திருப்பூர் நெரிப்பெரிச்சலை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (வயது 44). இவர் குன்னத்தூர் அருகே காவுத்தாம்பாளையத்தில் புதியதாக வீட்டுமனை விற்பனை செய்யப்படுவதாகவும், அங்கு வீட்டுமனை வாங்கினால் குறைந்த விலையில் வீட்டுனை கிடைக்கும் என்றும், எனவே முதலில் ரூ.1 லட்சம் முதல் ரூ.2½ லட்சம் வரை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். மேலும் 6 மாதத்திற்குள் கிரையம் செய்து கொடுப்பதாக ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால் பணம் வாங்கிய பின்னர் 2 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனையை கிரையம் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து வௌ்ளிரவெளியை சேர்ந்த கதிர்வேல் (40) மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேர் குன்னத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர்.

ரியல் எஸ்டேட் ஏஜெண்டு கைது

புகாரின் பேரில் போலீசார் புவனேஸ்வரனை பிடித்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் 47 பேரிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்து வீ்ட்டுமனையை கிரையம் செய்து கொடுக்காமல் இருப்பது தெரியவந்தது. இது குறித்து குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Related Tags :
Next Story