கோவில்பட்டியில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் வெளியீடு


கோவில்பட்டியில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் வெளியீடு
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் 2 சினிமா தியேட்டர்களில் 'மாமனிதன் வைகோ' ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை ம.தி.மு.க. தலைமை நிலைய பொதுச் செயலாளர் துரை வைகோ, மாநில துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர் பவுன் மாரியப்பன், நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், கேசவன் நாராயணன், மாரிசாமி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர்கள் சிவக்குமார், ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

பின்னர் துரை வைகோ பேசுகையில், "தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும் போது கட்சி வலுவாக இருந்தது. பழையபடி இழந்ததை மீட்க வேண்டும். நான் பல திட்டங்கள் வைத்துள்ளேன். இயக்கத்தை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும். இழந்ததை மீட்போம், வரலாறு படைப்போம். அதற்கு ஒரு செயல் திட்டம் வைத்துள்ளேன். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த ஆவணப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தொண்டர்கள், நிர்வாகிகள் இணையதளங்கள் மற்றும் வீடு வீடாக எடுத்துச் சென்றுள்ளனர். இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும். மற்றவர்களுக்கு கதவு திறந்தே உள்ளது. வெளியே செல்லலாம். உழைப்பிற்கும், விசுவாசத்திற்கு மட்டும் தான் மரியாதை" என்றார்.


Next Story