மம்சாபுரம் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பத்ரகாளியம்மன் கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பத்ரகாளியம்மன், கல்வி விநாயகர், கன்னிமூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, கோவிந்தன், கருப்பசாமி, பைரவர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் ஆகிய சுவாமிகளுக்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதில் சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறை தலைவர் வேல்சாமி, செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் குமார், பள்ளி செயலாளர் தனசேகர், பள்ளி தலைவர் நாகராஜன், நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா, தொழில் அதிபர்கள் மகாலிங்கம், விஜயகுமார், தென்னவன், செல்வம், உறவின் முறையினர், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பால் அபிஷேகம்
முன்னதாக 500-க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்து பத்ரகாளி அம்மன் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து இருந்தனர். யாகசாலை பூஜைகளை சுவாமிநாதன் ரமேஷ் பட்டர் செய்தார்.