வீடு புகுந்து திருட முயன்றவர் பிடிபட்டார்
பட்டுக்கோட்டை அருகே வீடு புகுந்து திருட முயன்ற ஒருவர் பிடிபட்டார். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை அருகே வீடு புகுந்து திருட முயன்ற ஒருவர் பிடிபட்டார். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருட முயற்சி
பட்டுக்கோட்டையை அடுத்த வேப்பங்காடு தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது48). விவசாயி. இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது யாரோ வீட்டிற்குள் நடமாடுவது போன்ற சத்தம் கேட்டது.
அதைத் தொடர்ந்து அவர் வீட்டிற்குள் பார்த்தபோது 3 பேர் வீட்டில் உள்ள பெரிய வெண்கல பாத்திரத்தை (தவலை) திருட முயற்சி செய்தது தெரியவந்தது. உடனே செந்தில்குமார் வெளியே ஓடிப்போய் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவர்களை பிடிக்க முயன்ற போது ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
2 பேருக்கு வலைவீச்சு
மற்ற இருவரும் அவர்கள் வந்த பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி சென்றனர். பிடிபட்டவரை பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் செந்தில்குமார் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பதும் அவருடன் திருட வந்து தப்பி சென்ற மற்ற 2 நபர்கள் ராஜா, மணி என்பதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் தப்பி சென்ற மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.