ஆயுதப்படை போலீஸ்காரரை தாக்கியவர் கைது


ஆயுதப்படை போலீஸ்காரரை தாக்கியவர் கைது
x

நெல்லையில் ஆயுதப்படை போலீஸ்காரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லையில் ஆயுதப்படை போலீஸ்காரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

போலீஸ்காரர்

நெல்லை பாளையங்கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் குருசாமி மகன் செல்லத்துரை (வயது 31). இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளார்.

இவருக்கும் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த பிரேம்குமார் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

கைது

இந்த நிலையில் பாளையங்கோட்டை கக்கன்நகர் புதுக்காலனி பகுதியில் செல்லத்துரை நின்றுகொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த பிரேம்குமார் உள்ளிட்டவர்கள் செல்லத்துரையை தாக்கி அவரிடம் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி, கைக்கெடிகாரம் உள்ளிட்டவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.


Next Story