ஆட்டோ டிரைவரை தாக்கி செல்போன் பறித்தவர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு
ஆட்டோ டிரைவரை தாக்கி செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்ார். 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி
பொன்மலைப்பட்டி, ஆக.27-
திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் சரண் (வயது 27). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் திடீர் நகர் பகுதியில் சவாரிக்காக சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த குமரேசன், வசந்த், பொன்மலை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த பாரதி (21) ஆகியோர் ஆட்டோவை வழிமறித்து ஏன் ஆட்டோவில் வேகமாய் செல்கிறாய் என்று கேட்டு அவரிடம் தகராறு செய்து அவரை கட்டையால் தாக்கியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.4 ஆயிரம், செல்போனையும் பறித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதியை கைது செய்தனர். குமரேசன், வசந்த் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story