கள்ளக்குறிச்சி அருகே மளிகைக்கடைக்காரரை தாக்கியவர் கைது
கள்ளக்குறிச்சி அருகே மளிகைக்கடைக்காரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுதாகர் (வயது 36). இவர் நீலமங்கலம் கூட்டுரோட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியில் வசிக்கும் செந்தில் மனைவி ஜெயந்தி என்பவர் கடனுக்கு பொருட்கள் வாங்கியதாக தெரிகிறது. அந்த வகையில் ரூ.15 ஆயிரம் கடன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயந்தி வேறு கடையில் பொருட்கள் வாங்கி சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுதாகர், ஜெயந்தியின் வீட்டிற்கு சென்று தனக்கு தர வேண்டிய பாக்கி தொகையை கேட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஜெயந்தியின் கணவர் செந்தில், சுதாகரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.
Related Tags :
Next Story