நகராட்சி அலுவலரை தாக்கியவர் கைது


நகராட்சி அலுவலரை தாக்கியவர் கைது
x

நாகையில் நகராட்சி அலுவலரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை பப்ளிக்ஆபீஸ் சாலையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது56). இவர் நாகை நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். நாகை காடம்பாடியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் நேற்று முன்தினம் நாகை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரனிடம் தனது வீட்டின் வரைபடம் குறித்து சந்தேகம் கேட்டார். இதற்கு நகராட்சி பொறியாளர் வீட்டின் வரைபடம் குறித்த சந்தேகத்தை உங்கள் வீட்டை வடிவமைப்பு செய்த பொறியாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுவும் என்று கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. அப்போது அங்கு இருந்த நகரமைப்பு அலுவலர் செல்வராஜ், இதுகுறித்து கேட்டுள்ளார். அவரையும், கோவிந்தராஜ் கையால் தாக்கினார். காயமடைந்த செல்வராஜ் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர்.


Related Tags :
Next Story