டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கியவர் கைது


டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கியவர் கைது
x

டாஸ்மாக் ேமற்பார்வையாளரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் முகமது பாபு (வயது 55). இவர் ஆத்தூர் அருகே உள்ள டாஸ்மாக் ஒன்றில் மேற்பார்வையாளராக (சூப்பர்வைசர்) பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு வந்த திருமாநிலையூரை சேர்ந்த விக்னேஷ்வரன் (26) என்பவர் முகமது பாபுவிடம் மது கேட்டுள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், முகமதுபாபுவை தகாத வார்த்தையால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி தாக்கினார். இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பானுமதி வழக்குப்பதிந்து, விக்னேஷ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story