பெண்ணை கம்பால் தாக்கியவர் கைது; 5 பேர் மீது வழக்கு


பெண்ணை கம்பால் தாக்கியவர் கைது; 5 பேர் மீது வழக்கு
x

பெண்ணை கம்பால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே உள்ள மோகனூரை சேர்ந்த குணசேகரன் மனைவி அழகுமணி (வயது 45), தங்கவேல் மகன் சசிகுமார் (45). இவர்கள் தங்களுடைய ஆடுகளை அங்குள்ள வயலில் மேய்த்து உள்ளனர். அப்போது அவர்களுக்கும், அதே ஊரை சேர்ந்த சுரேஷ் (32), ரமேஷ், கண்ணதாசன், ராஜேஸ்வரி, சுதா, தீர்த்தய்யா ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது. இதில், அழகுமணி மற்றும் சசிகுமாரை அவர்கள் கம்பால் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுமணி மற்றும் சசிகுமாரை தாக்கிய சுரேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story