சொத்து தகராறில் தம்பியை தாக்கியவர் கைது


சொத்து தகராறில் தம்பியை தாக்கியவர் கைது
x

சொத்து தகராறில் தம்பியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது குடும்பத்திற்கும், இவரது அண்ணன் பாண்டியன் (வயது 45) குடும்பத்திற்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. கடந்த 19-ந் தேதி மதியம் பாண்டியன் மற்றும் அவரது மனைவி வளர்மதி (34) ஆகியோர் காமராஜ் வீட்டிற்கு சென்று காமராஜையும் அவரது மனைவி ஜெயந்தியையும் (33) தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ஜெயந்தி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் தனசெல்வன் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story