தூத்துக்குடி அருகே முதியவரை அரிவாளால் வெட்டியவர் கைது


தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே முதியவரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள மேல செக்காரக்குடியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 70). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சுந்தர்ராஜ் (53) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் நடராஜன் மேல செக்காரக்குடி பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த சுந்தர்ராஜ், நடராஜனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டி, கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரிடம் இருந்து தப்பிய நடராஜன் அளித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்சென்ட் அன்பரசி வழக்குபதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்தார்.


Next Story