வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் கைது


வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் கைது
x

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

கம்மாபுரம்,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அ.குன்னத்தூரைச் சேர்ந்தவர் பெரியதம்பி மகன் ராஜா (வயது 35). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் அருகே ஆதனூரைச் சேர்ந்த உதயகுமாா் என்பவா் அறிமுகம் ஆனாா். அப்போது அவா், தன்னிடம் பணம் கொடுத்தால் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய ராஜா, ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட உதயகுமார் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ராஜா, உதயகுமாரின் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி கேட்ட போது, உதயகுமார் தனது மனைவி மகாலட்சுமி மற்றும் ஆதரவாளர்கள் முனுசாமி, வெங்கடேசன் ஆகியோருடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் உதயகுமார் உள்ளிட்ட 4 பேர் மீதும் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த உதயகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் மகாலட்சுமி, முனுசாமி, வெங்கடேசன் ஆகியோரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Next Story