இணையவழியில் வாலிபரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்தவர் கைது


இணையவழியில் வாலிபரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2022 12:17 AM IST (Updated: 23 Nov 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

இணையவழியில் வாலிபரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

ரூ.2¼ லட்சம் மோசடி

அரியலூர் மாவட்டம், செந்துறை காந்தி நகரை சேர்ந்த முருகன்(வயது 28). இவரை வெளிநாட்டு தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள், அவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இணையதளம் வாயிலாக தெரிவித்துள்ளனர். அதை நம்பிய முருகன், அதற்காக ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தை இணையதளம் மூலம் இழந்துள்ளார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து முருகன், இது பற்றி கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் அரியலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்க திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ் குமார் உத்தரவிட்டார்.

கைது

இதையடுத்து இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவனேசன் (தொழில்நுட்பம்) மற்றும் போலீசார் சுதாகர், ரஞ்சித் குமார் ஆகியோர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு, முருகனிடம் பணத்தை மோசடி செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி, இணைய மற்றும் பணமோசடியில் ஈடுபட்ட காஞ்சீபுரம் மாவட்டம், தாம்பரம் முடிச்சூர் மதனபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் மகேஷ்(39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மற்றும் 2 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story