அடமான பத்திரத்தை கொடுக்காமல் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது


அடமான பத்திரத்தை கொடுக்காமல் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

அடமான பத்திரத்தை கொடுக்காமல் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது

ராமநாதபுரம்

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே பெரிய மாயாகுளத்தை சேர்ந்தவர் கலீல் ரகுமான். இவர் ராமநாதபுரத்தில் மிளகாய் கமிசன் கடை வைத்திருந்தார். அப்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் ராமநாதபுரம் கங்காதரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, பணம் வேண்டும் என்றால் குறைந்த வட்டிக்கு வாங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

அப்போது கலீல் ரகுமான் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கங்காதரனிடம் சென்று கேட்டுள்ளார். ரூ.100-க்கு 1 ரூபாய் வட்டி வீதம் ரூ.4 லட்சம் வட்டிக்கு பெற்று மாதம் தவறாமல் வட்டி செலுத்தி வந்துள்ளார். உறவினர்களுக்கு ஏதேனும் பணம் தேவைபட்டால் வாங்கி கொடுங்கள் என்று கூறியதால் கலீல் ரகுமான் உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ள 19 பேருக்கு மொத்தம் ரூ.46 லட்சம் கடனாக பெற்று கொடுத்துள்ளார். அந்த பணத்திற்கு பதிலாக 19 பேரின் வீட்டு பத்திரங்களை அடமானம் வைத்துள்ளார். கடன் வாங்கியவர்களில் பலர் அசல் தொகையை செலுத்தி விட்ட நிலையில் அதை வட்டி தொகையில் வரவு வைத்து தற்போது ரூ.50 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். ரூ.46 லட்சம் அசல் தொகைக்கு ரூ.1½ கோடி செலுத்தியும் கங்காதரன் பத்திரத்தை கொடுக்காமல் ஆட்களை வீட்டிற்கு அனுப்பி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையிடம் கலீல் ரகுமான் மனைவி உம்முல் ஹபீபா புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் ஏர்வாடி போலீசார் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.


Related Tags :
Next Story