வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
சங்கரன்கோவிலில் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 30). இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் நாகராஜ் வீட்டை சோதனை செய்தனர். அங்கு விற்பனைக்காக 200 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story