விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது


விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது
x

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அருங்கல்பாளையம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் அறிவுறுத்தலின்படி கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அனிதா ஆரோக்கியமேரி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். அவரை சோதனை செய்தபோது, அவர் சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்க வந்ததாகவும், ஆனால் அதனை யாரும் வாங்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் பிரசாந்தை(வயது 30) கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story