பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
வெளிப்பாளையம்:
கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மனைவி சத்தியபிரியா (வயது26). இவர்களுக்கு 6 வயதில் தீபிகா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் சத்தியபிரியா கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் பட்டமங்களம் பகுதியை சேர்ந்த சிங்காரவேலு (33) என்பவருடன் சத்தியபிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். தற்போது சத்தியபிரியா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சிங்காரவேலுவிடம் சத்தியபிரியா கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிங்காரவேலு இதுகுறித்து வெளியே ெதரிவித்தால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சத்தியபிரியா நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.