கோத்தகிரி அருகே வீட்டில் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது -கஞ்சா செடி வளர்த்து வந்ததும் அம்பலம்
கோத்தகிரி அருகே வீட்டில் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது - கஞ்சா செடி வளர்த்து வந்ததும் அம்பலம்
கோத்தகிரி
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின்பேரில் நேற்று கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் கான் மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் சபீர்கான் ஆகியோர் கொண்ட குழுவினர் கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த மோகன் (வயது 50) என்பவர் தனது வீட்டுக்கு அருகில் 3 கஞ்சா செடிகளை வளர்த்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் அவர் 5 வெடிமருந்து பாக்கெட்டுகள் மற்றும் 2 ஜெலாட்டின் குச்சிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கஞ்சா செடிகளை வீட்டுக்கு அருகில் வளர்த்து விற்பனை செய்து வருவதும், கிணறு வெட்டும் தொழிலாளியான அவர் கிணறு வெட்டும் பணிக்கு உபயோகிப்பதற்காக வெடிபொருட்களை வாங்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கஞ்சா செடிகள் மற்றும் வெடிமருந்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.