டாஸ்மாக்பார் ஊழியரை மிரட்டியவர் கைது
சங்ககிரியில் டாஸ்மாக் பார் ஊழியரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
சங்ககிரி:-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 32). இவர் சங்ககிரி பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை பாரில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள பெட்டிக்கடை முன்பு சுரேஷ் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சங்ககிரி அக்கமாபேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் (33) என்பவர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததுடன், கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன்மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story