பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு ஆயுதகளம் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வினோதா (வயது 26). இவருக்கும் கீழத்தெருவை சேர்ந்த வீரமணி மகன் பாலாஜி (26) என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பாலாஜி தனது உறவினர்களுடன் சேர்ந்து வீட்டில் தனியாக இருந்த வினோதா மற்றும் அவரது மாமியார் சந்திரா ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வினோதா அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story