கம்பிகளை திருட முயன்றவர் கைது; சரக்கு ஆட்டோ பறிமுதல்


கம்பிகளை திருட முயன்றவர் கைது; சரக்கு ஆட்டோ பறிமுதல்
x

கம்பிகளை திருட முயன்றவர் கைது செய்யப்பட்டு, சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், நன்னை கிழக்கு தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(வயது 26). இவர் தனியார் கட்டிட நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது தமிழக அரசின் சார்பில் சிறுவாச்சூர் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணியில் ஒப்பந்த முறையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் திருநாவுக்கரசு நின்று கொண்டிருந்தார். அப்போது பாடாலூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்த ராம்குமார்(28) என்பவா் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கம்பியில் உள்ள கம்பிகளை கழற்றி தனது சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது திருநாவுக்கரசு மற்றும் அவருடன் பணிபுரிபவர்கள் சத்தம் போட்டதால், ராம்குமார் தப்பிக்க முயன்றார். ஆனால் அவரை விரட்டிச்சென்று கல்பாடி பிரிவு சாலை அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்போில் அங்கு வந்த பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராம்குமாரை கைது செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


Next Story