லாரி டிரைவர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது


லாரி டிரைவர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது
x

வாய்மேடு லாரி டிரைவர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

நாகை மாவட்டம், வாய்மேடு மேற்கு சாயக்காரன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 46). லாரி டிரைவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னாடிகாடு பகுதியில் நடைபெற்ற புதுமனை புகுவிழா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன்கள் ராமமூர்த்தி(33), மணிவண்ணன்(26) ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர், செல்வகுமார் வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணிவண்ணன் மற்றும் அவரது சகோதரர் ராமமூர்த்தி ஆகிய இருவரும் அவரை வழிமறித்து கம்பியால் நெற்றியில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த செல்வகுமார் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தனர். ராமமூர்த்தியை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்ரியா மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் வாய்மேடு பகுதியில் நின்று கொண்டிருந்த ராமமூர்த்தியை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story