குளத்தில் பிணமாக மிதந்த தி.மு.க. பிரமுகர் மகன்
தி.மு.க. பிரமுகர் மகன் குளத்தில் பிணமாக மிதந்தார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது69). மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ளார். இவருடைய மகன் சீனிவாசன் (31). இவர் நேற்று முன்தினம் அங்கு உள்ள பிள்ளையார் கோவில் குளத்தில் விழுந்து கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story