நில மோசடியில் ஈடுபட்டவர் கைது


நில மோசடியில் ஈடுபட்டவர் கைது
x

நில மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பேட்டை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் அருண் சவுந்தரராஜன் (வயது 62). இவர் சுத்தமல்லி பெரியார் நகரை சேர்ந்த ரவீந்திரன் (40) என்பவரிடமிருந்து 4.92 செண்டு வீட்டுமனை இடத்தை கடந்த 2017-ம் ஆண்டு வாங்கினார். அந்த இடத்தின் பட்டா ரவீந்திரனின் தந்தை காசிலிங்கம் பெயரில் இருந்ததால் அதனை பயன்படுத்தி ரவீந்திரன் அந்த இடத்தை தனது பெயருக்கு மாற்றி, பின்னர் அவரின் மனைவி பெயருக்கு மாற்றி உள்ளார். இந்த நிலையில் அருண் சவுந்தரராஜன் தனது பெயரில் அந்த இடம் இல்லை என்பதை அறிந்து மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீராள் பானு விசாரணை நடத்தி நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றியதாக ரவீந்திரனை கைது செய்தார்.


Next Story