மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு ஜெயில்
மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு ஜெயில் சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது 42). கடந்த 2016-ம் ஆண்டு இவர் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பாக பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஆர்த்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, முத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story