விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு


விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
x

திருவையாறு அருகே விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு அருகே உள்ள கோனேரிராஜபுரம் காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது31). இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ராமமூர்த்தி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கடந்த மாதம் 22-ந்் தேதி பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார். இது குறித்து ராமமூர்த்தி மனைவி மகேஸ்வரி நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story