தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு  தொழிலாளி தற்கொலை
x

ஒரத்தநாடு அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கழுவன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது50). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக ராஜேந்திரன் கோபித்துக் கொண்டு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள வளத்தான்தெருவில் உள்ள உறவினர் மதியழகன் என்பவர் வீட்டுக்கு நேற்று காலை வந்தார். அங்கு வீட்டின் மாடி பகுதிக்கு சென்ற ராஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேந்திரன் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story