கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், போக்சோ சட்டத்தில் கைது


கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், போக்சோ சட்டத்தில் கைது
x

கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், போக்சோ சட்டத்தில் கைது

தஞ்சாவூர்

தஞ்சையில், கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

தஞ்சை கீழவாசல் ராவுத்தாபாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 43). இவர், தஞ்சையில் அக்குபஞ்சர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் இவருக்கும், தஞ்சையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனால் பாலமுருகன் அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்தார். அந்த பெண்ணிற்கும் 18 வயதில் மகள் உள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

இந்த நிலையில் கள்ளக்காதலியின் மகளான 18 வயது சிறுமியின் மீது பாலமுருகனின் பார்ைவ விழுந்தது. அந்த சிறுமிக்கு பாலமுருகன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டலும் விடுத்துள்ளார். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை தனது தாயிடம் கூறி கதறி அழுதார்.

கைது

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய் இது குறித்து தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.


Related Tags :
Next Story