ரெயிலில் 6 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
ரெயிலில் கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
சூரமங்கலம்:-
தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ெரயில் சேலம் அருகே வந்த போது, ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். இதில் முன்பதிவு பெட்டி ஒன்றில் சந்தேகப்படும் படியாக ஒருவர் கைப்பையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கேரள மாநிலம் பாலக்காடு வாழையார் அணை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் அருண் குமார் (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ெரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி கொண்டு கோவை வரை பயணம் செய்ய இருந்தது தெரியவந்தது, இதையடுத்து அவரை கைது செய்ததுடன், பறிமுதல் செய்த 6 கிலோ கஞ்சாவை சேலம் ெரயில்வே போலீசாரிடம் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story